நாம் எப்படி யோசிப்போம் என்பது நமக்குத் தெரியும். பெரிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் (CEOs) நெருக்கடி நேரத்தில் எவ்வாறு சிந்திப்பார்கள் என்று தெரியுமா? எந்தத் திறமை, எந்தெந்தப் பண்புகள் அவர்களை அத்தனை உயரத்தில் கொண்டு அமர வைக்கிறது என்று அறிவீர்களா? இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டுகிறது. பல பன்னாட்டு நிறுவனங்களிலிருந்து, தொண்டு நிறுவனங்கள் வரை பல்வேறு துறைகளை ஆளும் தலைமைச் செயல் அதிகாரிகள் இந்நூலில் வருகிறார்கள். ஒவ்வொருவரின் வெற்றிக்கும் பின்னணி என்னவென்று அலசப்படுகிறது. துறை சார்ந்த திறன் மட்டுமே அல்லாமல், அதற்கு மேலாகப் பல மென் திறன்களும், அணுகுமுறைகளும் இதற்கு அவசியம். வென்றவர்களின் வாழ்வில் இருந்து அவற்றை அடையாளம் காண்பது சுலபம் அல்லவா? அதைத்தான் செய்கிறது இந்நூல்..
Be the first to rate this book.