ஐம்பது ஆண்டு காலமாக சிறுகதைகள் எழுதிவரும் ஒரு படைப்பு எழுத்தாளனின் முதல் சிறுகதைத் தொகுதி. இக்கதைகள் 1965ஆம் ஆண்டிற்கும் 1972ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் எழுதப்பட்ட கதைகள். என் கதைகளில் நான் இல்லை. என் சொந்தக் கதையைச் சொல்வதில் எனக்கு விருப்பமே கிடையாது. வாசிக்கின்றவர்கள் தங்கள் கதையை எழுதிக்கொள்ளவே நான் கதை எழுதுவதாக நினைக்கின்றேன்.
-சா. கந்தசாமி
சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.
சா. கந்தசாமி அவர்களின் இந்தச் சிறுகதையை இயக்குனர் வசந்த் குறும்படமாக்கியுள்ளார்.
Be the first to rate this book.