இடங்கர் பாவலனின் ‘தாய்ப்பால் பள்ளிக்கூடம்’ நூலின் தலைப்பைப் பார்த்தவுடன், இது என்ன தலைப்பு… என முகம் சுழித்தேன். வாசிக்க வாசிக்க இடங்கரின் தொலைநோக்குப் பார்வையும், அறிவியல் தரிசனமும்வியப்பையும் மகிழ்வையும் தந்தது. படிக்கக்கூடிய கடினமான அறிவியல் சொற்களை குவியலாக அடுக்காமல், மிக எளிதாகப் புரியும் வண்ணம் அழகாகத் தொடுத்துள்ளார்.அவரின் அழகியல் உணர்ச்சி வெளிப்பாடு அறிவியலை எளிதாக்கும் முயற்சிக்குப் பெரிதும் உதவுகிறது. பிரசவித்த தாய்மார்கள், தங்கள் அடிவயிற்றுப் பிள்ளைச்சுமையை இறக்கியவுடனே, நெல்மணிகளை உதிர்த்த தட்டைகளைப்போல் இலகுவாகிப் போவார்கள் என்ற உதாரணம், உச்சியை குளிர்விக்கிறது.
Be the first to rate this book.