அருணா ராயும் சங்கதன் கூட்டமைப்பும் இணைந்து எழுதியிருக்கும் இந்த நூல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும், அவர்களது கதைகளையும் சொல்கிறது. மிக அசாதாரணமான அந்த மனிதர்கள், உண்மையான அரசு நிர்வாகம் என்றால் என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்களை, குறிப்பாக ஊழல்வாதிகளைக் கேள்வி கேட்டதன் மூலம் நமக்குப் புரியவைத்தவர்கள். 'தி இந்து'
உயிர்ப்புடன், எங்கும் பரவியிருந்த ஒரு புரட்சியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் ஒரு சிறந்த ஆதாரம். அது ஒரு தகவல் புரட்சி; உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் ஊழலை, அரசாங்கத்தின் அத்துமீறல்களைத் தடுக்க முடியவில்லை என்றாலும் அதன் வேகத்தைக் குறைக்கும் திறன் கொண்ட புரட்சி.
'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்'
Be the first to rate this book.