புத்தகங்கள் பற்றிய அறிமுகம் மூல நூல்களைத் தேடிப்படிக்க வேண்டும் என்கிற உணர்வைத் தோற்றுவிக்கிறது. வெகுசன வாசிப்பிற்கான புத்தகங்களைப் பற்றி எழுதும்போது அவற்றின் வெற்றிக்கான காரணங்களை அலசுவதோடு நின்றுவிடாமல் தன்னுடைய விமர்சனக் கருத்துகளையும் வைத்தியநாத் பதிவு செய்துள்ளார். தவிர எடுத்துக் கொண்ட விஷயம் கனமாக இருந்தாலும் சுவாரஸ்யமாக ஆங்காங்கே நகைச்சுவை ததும்பும் வரிகளின் மூலம் வாசகருக்குக் கடத்தும் வித்தை, கைவரப்பெற்றவராகவும் உள்ளார். அதிகப் பதிப்புகளின் மூலம் அதிகம் விற்பனையாகி, அதிக வாசகர்களால் படிக்கப்பட்ட புத்தகங்களைப் பற்றிய மதிப்பீடுகளைக் கொண்டுள்ள இந்நூல் இவ்வகையில் பிறந்த முதல் நூல், முன்னோடி நூல் என்றே கூறமுடியும்.
Be the first to rate this book.