சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்த ஹேமா அண்ணாமலை உற்பத்தித் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்திருக்கிறார். ஒரு சிறிய கிராமத்தில் எலெக்ட்ரிக் டூவீலர் தொழிற்சாலையை நிறுவி, ஆம்பியர் எனும் பிராண்டை உருவாக்கினார். ரத்தன் டாட்டா, கிருஷ் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பிரபலஸ்தர்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தார்கள். பத்தே ஆண்டுகளில் 100 கோடி ரூபாய் நிறுவனமாக ஆம்பியரை மாற்றிக்காட்டினார். சந்தேகமில்லாத தமிழ்ச் சாதனை இது.
தன் தொழில் வாழ்வில் பெற்ற பாடங்களை, கற்ற உத்திகளை இந்நூலில் தோழமையுடன் விளக்குகிறார் ஹேமா. பரபரப்பான திருப்பங்களோடுகூடிய பயோபிக் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு நமக்கு ஏற்படுகிறது. தொழில்முனைவுக்கு வழிகாட்டும் மிகத் தரமான இந்நூல் தமிழர்கள் தவிர்க்கக் கூடாத ஒன்று.
Be the first to rate this book.