கவிதை தோன்றுவதற்கான சூழலை, வெற்றிடத்தை ஒவ்வொரு கவிஞனும் தன் மனத்தில் கனமாகச் சுமந்தபடியே திரிகிறான். அவனுக்கே கவிதை கிட்டுகிறது. கவிதை நீர் போல, பள்ளத்திற்கே பாயும். கவிதை தீ போல, உள்ளொளியிலேயே எழும்பும். கவிதை வளி போல, தாழ்வு மண்டலத்திலேயே அதன் கண். கவிதை புவி போல, நிச்சலனத்திலேயே உயிர்க்கும். கவிதை அண்டவெளி போல, அந்தகார மனதிற்குள்ளேயே மினுங்கும்.
- காயத்ரி ராஜசேகர்
Be the first to rate this book.