புதுமைப்பித்தனின் சில படைப்புகளைப் போல எப்போதாவது மலரும் பூக்கள் இவை. இக்கதைகளில் அதிகமும் புராண நிகழ்வுகளைப் பகடி செய்யும் போக்கு உள்ளது. புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ இன்றளவும் பேசப்படுவதற்கு அதன் உள்ளடக்கமும் ஒரு காரணமாகும். சுப்பாராவின் புராண வாசிப்பனுபவங்களின் வழியே அவர் உருவாக்கும் கதைகள், புராணங்கள் காலம்காலமாக முன் வைக்கும் நியதிகளை மறுதலித்து புதிய பிற்போக்கற்ற முடிவுகளைச் சொல்கின்றன. இதுவே சுப்பாராவின் எழுத்தின் பிரதான பலமாக இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
Be the first to rate this book.