குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இக்கதைகள் மீண்டும் மீண்டும் படித்தாலும் மகிழ்வை ஏற்படுத்துபவை.
இவற்றைப் படிக்கவும், படித்ததை சக நட்புகளுடன், பகிர்வதும் கூட புது அனுபவமாக இருக்கும். அப்படி இக்கதைகளை அவர்கள் சொல்லும்போது, கொஞ்சம் கூடுதலாக சேர்த்துச் சொல்வதற்கும் இக்கதைகளில் இடமிருக்கிறது. வாசிக்க வாசிக்க மகிழ்ச்சியைத் தரும் இந்த நூலை சிறார் உலகம் கொண்டாடி வரவேற்கும்.
கவிதை, சிறுகதை, நாவல், பத்திரிக்கை, சமூக செயல்பாடு எனப் பல தளங்களில் தடம் பதித்தவர். ஆட்டிசம் எனும் குறைபாடு குறித்து நூல்கள் எழுதி, ஆட்டிசம் விழிப்புணர்வுக்காகவும் சிறார் இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார்.
Be the first to rate this book.