இது ஒரு நடிகையைப் பற்றிய கதை என்றாலும் நடிகைகளின் கதை அல்ல. ஆண்களால் ஆளப்படும் எல்லா அமைப்புகளுக்குள்ளும் இருக்கும் அதே தர்க்கங்கள்தான் சினிமாவிலும் இருக்கின்றன. எல்லா துறைகளிலும் பெண்கள் எப்படி ஆண்களின் உலகத்தை எதிர்கொள்ள நேர்கிறதோ அப்படித்தான் சினிமாவிலும் எதிர்கொள்கிறார்கள். சினிமாவில் இருக்கும் பெண் அரசியலுக்கு வருவதால், இது அரசியல் கதையும் அல்ல. இது தமிழ் சமூகத்தின் கதை. சினிமாவும், அரசியலும் ஊடகமும் ஒரு பெண்ணின் வழியே பயணப்படும் கதை. ஒரு வகையில்...ஏன் பலவகைகளில் நம் சம காலத்தைச் சொல்லும் கதை.
Be the first to rate this book.