இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்குப் புதிய கவிதை அனுபவங்களைக் கொண்டுவந்த வியத்தகு கவி சல்மா. சஞ்சலமும் தவிப்பும் ஆற்றாமையின் வலியும் நுண்ணுணர்வுடன் கூடிய அழகும் அவரது துவக்க காலக் கவிதைகளுக்கு இணக்கமானவையாக அமைந்தன. இந்தத் தொகுப்பில் அவரது கவிதைகளின் பார்வையும் பரிமாணங்களும் பாடுபொருளும் அழகும் பரந்து விரிந்துள்ளன. இப்போது அவருக்கு வாய்த்திருப்பவை பதற்றம் குறைந்த நாட்களில் தீர்க்கமாக வீசும் தடைகளற்ற காற்றும், கடல் பழகுதலும் கனவுகள் வராத இரவும் எப்போதும் ‘இன்னொரு பயணமும்’. தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைபோலப் புதிய வாழ்வு, புதிய வீச்சு, புதிய படிமங்கள் என அவருடைய கவிதைகள் இப்போது மென்மையின் குரல் ஒலி.
Be the first to rate this book.