இந்தியத் திருமணங்கள் அதிலும் குறிப்பாகத் தமிழகத் திருமணங்கள் ஏராளமான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கொணடது. அது எல்லாவ்ற்றிற்கும் முக்கியமான காரணங்களை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். கல்யாண வீடுகளில் தங்களைச் சுற்றி நடக்கும் இந்தச் சடங்குகளின் அர்த்தம் தெரியாமல்தான் மணமக்கள் அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு மதத்திற்கும் சமூகத்திற்கும் வேறுபடுகிற இந்த மங்கலச் சடங்குகளைப் பற்றிய தகவல்களை ஓராண்டிற்கும் மேலாகத் தேடிச் சேகரித்து நமக்கு வழங்கியிருக்கிறார் யுவகிருஷ்ணா. இதில் சடங்கு சம்பிரதாயங்களின் தோற்றம், வரலாறு பற்றி ஆராய்ச்சி செய்யாமல் பெரும்பாலான சமூகங்களில் நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை எந்த மாதிரியான சடங்குகள் நடைபெறுகின்றன என்பதை உள்ளது உள்ளபடி எழுதியுள்ளார். எந்தவொரு இடத்திலும் சார்பு நிலை எடுக்காது தன் கருத்தை முன் வைக்காது எழுதியுள்ளதால் இந்நூல் ஆவணமாக மாறியுள்ளது.
Be the first to rate this book.