தம்பதிகளுக்கான நடைமுறை கேஸ் வரலாறுகள் அடங்கிய மிகச் சிறந்ததொரு நூலே தாம்பத்யம்: இணைப்பு - பிணைப்பு. அன்பை உடல் சார்ந்ததாக நினைக்கும் கலையியல் கண்ணோட்டமில்லாத கணவன் மனைவியரின் அணுகுமுறையிலிருந்தே இந்த நிலை உருவாகின்றது. அதிகபட்சமான விவாகரத்துக்கள் நடப்பதன் பின்னணியிலுள்ள அறியப்படாமலிருக்கும் காரணம் பாலியலே என்று மனோதத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர்.
உறவுகள், உரசல்களாக மாறும் நிலை தாம்பத்ய வாழ்க்கையில் தவிர்க்க இயலாததாயிருக்கிறது. மனதில் ஏராளமான கனவுகளுடன் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர் சிறிது காலத்திற்குப் பின்னர் கட்டிவைத்த வேலிக்குக் காவல் நிற்கிறவர்களாக மாறுவதே வழக்கம்.
Be the first to rate this book.