கூக்குரலிடாமல், கோபப்படாமல், ஆத்திரமோ ஆவேசமோ கொள்ளாமல், எளிய மக்கள் இந்த வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார்கள். அடுத்தடுத்து அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எப்படித் தாங்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள். அதற்காக எப்படிப் போராடுகிறார்கள் என்கிற சிக்கல் அடுக்குகள் கதைகளின் களமாக அமைந்துள்ளன. கதைகளனைத்திலும் எந்த அலங்காரமோ. சொற்செட்டோ, வடிவச் சோதனைகளோ இல்லை. எதார்த்த நடையில் அடர்த்தியான வாழ்க்கையைச் சொல்லும் கலைதான் எழுத்தாளர் சாந்தா கோவிந்தனின் வெற்றி.
கதைகள். நாம் அன்றாடம் காணும் வாழ்வையே நுண்ணோக்கி வழியே பெரிதாக்கிக் காட்டு வதுதானே. கண்ணுக்குத் தெரியாமலிருக்கும் வாழ்வனுபங்கள் எழுத்தாளரின் கலையுழைப்பால் அப்படியே பிரம்மாண்டமாகத் தெரிகிறது. எளிய மக்களின் வாழ்வை அவர்களின் பாடுகளைச் சொல்லும் கதைகளைக் கொண்ட தொகுப்பாக இது மலர்ந்திருக்கிறது.
- கா.உதயசங்கர்
சாகித்ய அகாதெமி
பாலபுரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர்
Be the first to rate this book.