அனுபவங்களை அவை எழுந்த பாங்கில் தக்கவைத்துக் கொள்ளும் மனம்.பொதுப்புத்தியும் விவேகமும் கொண்ட ஒரு கீழ்நாட்டு மனம். லோகாயதத் தளத்தில் தன் அடிச்சுவடுகளை ஆழப் பதித்துக்கொண்டு நிற்கும் மனம். அதனால் இவருக்கும் புற உலகத்துக்குமான உறவு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. புறத்தளம் இவருக்கு முற்றிலும் நிஜம் என்பதால் அவற்றின் சலனங்களும் இவரைப் பாதிக்கின்றன. ஜீவன்களின் பரிதவிப்பு, இயற்கையின் கோலங்கள், தனிமை, வாழ்க்கைப் புதிர்கள், பருவ மாற்றங்கள், மனித மனோபாவங்கள், இயலாமைகள், இயற்கை எனும் ஆச்சரியம் எல்லாம் இவரைப் பாதிக்கின்றன. ஆனால் எதிலும் பட்டுக்கொள்ளாமல் விலகிநிற்கும் மனம் இவருடயது.
- சுந்தரராமசாமி
Be the first to rate this book.