ஒருவரை ஒருவர் அரவணைத்து ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்று சொன்னாலே நமக்கு நம்மைச் சுற்றி வாழும் சமூகம்தான் ஞாபகத்திற்கு வரும். அதாவது வெளியே. ஆனால், சொந்த வீட்டிற்குள் கூட சண்டை முடிவுக்கு வந்திருக்காது. பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமே பிணக்கம். அண்டை வீட்டாருடன் சண்டை. உறவினர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை. அநீதியான அணுகுமுறைகள், துரோகங்கள், ஆணவ ஆதிக்கப் போக்குகள் போன்றவை நமது குடும்பப் பிணைப்புகளைக் கடுமையாகச் சிதைக்கின்றன. இந்த அவல நிலையில்தான் நாம் நமது சமூகத்திலுள்ள அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப்பட இயக்கம் செய்கிறோம். மெய்யான செய்தி, குடும்பங்களின் சீர்திருத்தமே சமூகச் சீர்திருத்தங்களின் முதல் கட்ட பணி. இதற்கு இறைநம்பிக்கை சார்ந்த வழிகாட்டல் முக்கியம். ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களின் இந்த நூல் தாய் தந்தை, சொந்தபந்தம், அநாதை, அண்டை வீடு தொடர்பான உபதேசங்களையும் உறவுச் சிக்கலை அவிழ்க்கின்ற தீர்ப்புகளையும் தொகுத்தளிக்கின்றது.
Be the first to rate this book.