இன்றைய காலத்தில் கர்ப்பத்திற்கும், சுகப்பேறுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், தாய்ப்பாலுக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. கர்ப்பம் பற்றி, சுகப்பேறு பற்றி கிராமங்களில் நாசுக்காக பல அனுபவ அறிவின் வழியே பெண்களைத் தயார்படுத்துகிற போக்குகள் இருந்தாலும் கூட, அப்படிப்பட்ட அனுபவ அறிவின் வழியே பாலூட்டும் பண்பாடும் ஓரளவே நமக்குக் கிடைக்கிறது. அதிலும் பல மூடநம்பிக்கைகளையே காண்கிறோம். இத்தகைய சூழலில், தாய்ப்பால் பற்றிய அறிவியல் பூர்வமான விசயங்களை பெண்களுக்கும், தாய்மார்கலுக்கும், இச்சமூகத்திற்கும் கொண்டுசேர்க்கும் முயற்சியின் விளைவே இந்தப் புத்தகம்.
Be the first to rate this book.