தாய்மொழியை மூலதனமாகக் கொண்டு கற்றல் தொழிலை மேற்கொள்ளும் குழந்தை மேலும் மேலும் வளர்ச்சியடைகிறது. தெளிவான சிந்தனையைப் பெறுகிறது. ஆய்வு மனத் தூண்டுதல் ஏற்படுகிறது. அவ்வாறின்றி குடும்பச் சூழலிலிருந்து முற்றிலுமாகப் பெயர்த்தெடுத்து ஆங்கிலக் கல்வி வயலில் நடும்போது குழந்தையின் மனம் தடுமாறுகிறது. நாக்கில் ஒரு மொழி மாற்றம் செய்யத் தவிக்கிறது. நாம் எண்ணியதை வெளிப்படுத்த இயலாமல் கேள்வி கேட்பதையே தவிர்க்கிறது. இதனால் தேடல் தடைபடுகிறது. இரண்டும் கெட்ட நிலையிலே காலத்தைத் தள்ளுகிறது. மனப்பாடப் பயிற்சிக்குச் சென்று கூடுதல் மதிப்பெண்களைப் பெற எத்தனிக்கிறது.
Be the first to rate this book.