ஒரு பெண் எப்போது முழுமையடைகிறாள் எனும் கேள்விக்கான விடை, அவள் தாய்மையடையும்போதுதான் என்பதே சரியானதாக இருக்கும். அந்த அளவுக்கு தாய்மைத்தன்மை புனிதமானது. ஓர் உயிரை உருவாக்கித் தரும் ஒப்பற்ற கடமையைச் செய்வதும் தாய்மைதான். ஒரு தேசத்தின் ஆரோக்கியம் என்பது தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தைக்கொண்டே கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் கர்ப்பகாலப் பராமரிப்பு உணவுகள், சடங்குகள் இருந்தன. இன்று அவை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு பெண் தன் தாய் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக்கொண்ட காலம் போய் இன்று பெரும்பாலான பிரசவங்கள் மருத்துவமனைகளிலேயே நடைபெறுவதற்குக் காரணங்கள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தான உணவுகள், உணவு முறைகள் சரியாக இல்லாமையே! பாதுகாப்பான மகப்பேற்றுக்கு கர்ப்ப காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் எடுத்துக் கொள்ளவேண்டிய ஊட்டச்சத்தான உணவுகள் இரண்டுமே மிக இன்றியமையாதவை. அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் தொடர்ந்து நம் குடும்பங்களில் பயன்படுத்தப்படும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும் இந்நூலில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. கர்ப்ப காலம் மற்றும் பேறுகால பராமரிப்புக்கான முறைகளின் தொகுப்பு நூல் இது. நம் முன்னோர்கள், பேறுகாலத்திலும் அதற்குப் பின்னும் ஆரோக்கியமாக இருப்பதற்குப் பின்பற்றிய வழிமுறைகள் பல இதில் தொகுக்கப்பட்டுள்ளன. வேலைக்குச் செல்லும் பெண்கள் எளிதாகக் கடைப்பிடிக்கவேண்டிய உணவு முறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, தாய்மையடைந்த பெண்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டிய நூல் இது!
Be the first to rate this book.