சொல்கதை, நிகழ்கதை, படிமக்தை, வரலாற்றுக் கதை , கதையில் மூழ்கும் கோணங்கியின் அதிகதைகளாலான நாவல்- ஆயிரம் பக்கங்களில், நேர்த்திமிகு அச்சில்.
த நாவலைத் திறக்கிறீர்கள். பென்சில் கோடுகளால் புனைவு உடலை வரைந்து அதன் குறுக்குவெட்டுப் பாதைகளில் பயணிக்கிறீர்கள். நிச்சலனமான வாசிப்புக்குத் தயாராகிறீர்கள். எழுதுதல்தான் நாவல். மொழிக்கு வெளியில் த நாவல் இல்லை. எனவேதான் த நாவலின் மொழிப்பரப்பில் இன்றைய நவீன வாசகனாக நாவலின் பதினாறு காற்றுகளை சுவாசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்போது தெரிந்துவிடும் பிரதியும் ஒரு புனைவுதான் என்று. புனைவின் மூலகங்களை கனவுகளாகவும் அடைந்துள்ளது த நாவல். எதிர் நாவலுக்கான காகிதங்களும் அடித்துத் திருத்திய கச்சாவான குறிப்புகளும் வாசகனின் புனைவுக்கான பிறை வடிவ நுழைவு வாயில்களாக உள்ளன.
ஒவ்வொரு பிறையும் வட்டமான ஏரியில் வீழ்ந்ததும் பக்கத்தை திருப்புகிறீர்கள். அசைவற்ற நீர் மைய அலைகளில் வாசிப்பு தொடர்கிறது. த நாவலின் பக்கங்களுக்கு வெளிப்புறம் உள்ளே புரளும் காகித அடுக்கில் பார்வைத்தளம் உள்ளது. நாவலின் மையம் எப்போதும் த-க்களின் நூலாக உட்பரப்பினுள் மீன்கள் நீரேற்றத்தில் தவழ்ந்து உள்படர்கின்றன. உலகின் நீராகவும் நாவலின் அலையடுக்கில் கடந்து ஏறும் மீனாகிறீர்கள்.
அடிப்படையற்ற இருப்பில் விடுதியின் விளக்கொளியில் நாவல்களாக மாறும் நாவலாக எழுதப்பட்ட கோடுகளில் நுழைந்து வரும் கதாபாத்திரங்கள் பிரதான இடத்துக்கு வருகிறார்கள். இவர்கள்தான் நிராகரிக்கப்பட்ட கதாப்பாத்திரங்கள். தனுஷ்கோடி ஓவியத்திலிருந்து விரல்களை எடுக்கமுடியாது என்னால். முதலில் அபூர்வமானதாகவும் பிறகு உப்பு விடுதியின் தனிமையாகவும் உப்புக்காற்று நூலகத்தில் இசை மாறு உண்டாவதை கானல் வரிகளில் காண்கிறீர்கள். நாவல் இயற்றும் மூத்தமொழியின் பாய்மரத்தில் வாசித்தவாறு கமாரா வாசிகளைச் சந்திக்கிறீர்கள்.
Be the first to rate this book.