“பிரசித்தி பெற்ற இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாகத் தலைமைதாங்கி வழி நடத்தி வந்த விசாலாந்திரா மாநிலக் குழுவின் ஏழு செயற்குழு உறுப்பினர்களில் ஒருவர் தோழர் சுந்தரய்யா என்று மட்டும் சாதாரணமாகக் கூறினால் போதாது; அவர் ஆயுதப் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில், ஆயுதப்போராளிகளுடன் பல மாதங்களைக் கழித்தவர். போராட்டத்தின் அன்றாட நடைமுறைக் கொள்கை வழியை உருப்பெறச் செய்வதிலும் ஐந்தாண்டுகள் நீடித்த விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்தை நடத்துவதிலும் அவர் ஒரு தலையாய பங்கு வகித்தார். இது, அவரை, ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தீவிர செயலூக்க ஊழியர்களுடன் விசேஷமாகப் பிணைத்தது. ” இவ்வாறு முன்னுரையில் தோழர் எம். பசவபுன்னையா கூறியிருக்கிறார்.
Be the first to rate this book.