பச்சிளம் குழந்தையை வளர்ப்பதில் சில சிரமங்கள் என்றால், நடைபயிலும் குழந்தையை வளர்ப்பதில் வேறு சில சிரமங்கள் உண்டு. நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் இவர்கள் அடம்பிடிக்கும்போது கொஞ்சம் அதட்டி, உருட்டி பணியவைத்து விடலாம். ஆனால், மேற்சொன்ன இரு வகையானவர்களையும் வளர்ப்பதில் இல்லாத புது மாதிரி சிரமங்கள் டீன் ஏஜ் பருவத்தினர் வளரும்போது இருக்கின்றன. விஷயங்களை அவர்களுக்கு ஊட்டுவதில்லை; பரிமாறிக்கொள்கிறோம். அவ்வாறு பரிமாறிக்கொள்ளும்போது பெரியவர்களுக்கே கூச்சமும், பயமும் ஏற்படும். எவ்வளவுதான் மறைத்தாலும் அந்தக் கூச்சத்தையும் பயத்தையும் கண்டு அரும்புகள் உள்ளத்தில் மிரள்கின்றனர், தடுமாறுகின்றனர். டீன் ஏஜ் பருவத்தினரை இலக்காகக் கொண்டு டாக்டர் என்.கங்கா, எழுதியிருக்கும் இந்த நூலில், டீன் ஏஜ் பருவத்தைக் கடக்கும்போது, அவர்களுக்கு மன ரீதியாக எழும் அவஸ்தைகள், உடலில் ஏற்படும் மாற்றங்கள், உடல் உபாதைகள் ஆகியவற்றையும், அவற்றை சரி செய்துகொள்ளும் வழிகளையும் விவரித்துள்ளார். வருமுன் காக்கும் சில யுக்திகளையும் தெரிவித்துள்ளார்
Be the first to rate this book.