இந்நூல் ஒரு விவசாயப் போராட்ட வரலாறு. 1946 இல் தொடங்கி 1950 வரை நடந்த வங்காள ஏழை விவசாயிகளின் வீரஞ்செறிந்தப் போராட்ட வரலாறு. ஒரு புரட்சிக்கு இணையான தெலங்கானா போராட்டத்திற்கு சமகாலத்திலேயே வங்கத்தில் வெடித்த விவசாய எழுச்சி.
இந்த எழுச்சியை வடிவமைத்த சிற்பி, போராட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தவர், போராட்ட காலத்தில் வங்காள விவசாய சங்கத்தின் பொது செயலாளராக பணியாற்றியவர் தோழர் அபானி லகரி. தெபாகா எழுச்சியின் ஐம்பதாவது ஆண்டை முன்னிட்டு, போராட்ட தளபதியான அபானி லகரியை பேராசியர். ரணஜித் தாஸ்குப்தா ஒரு அறிவாய்ந்த நேர்காணல் செய்து தொகுத்ததில் இந்நூல் வடிவமைந்தது.
இந்நூலை நேர்காணல் என்றோ, சுயசரிதை என்றோ கூற முடியாது என்பதை வாசகர்கள் உணர்வார்கள். விடுதலை போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பங்கு, வெகுமக்களை திரட்டுவதில் அவர்களது அர்ப்பணிப்புடனான உழைப்பு, உயிர் தியாகங்கள் உள்ளிட்டு, முக மலர்ச்சியுடன் செய்த அளப்பறிய தியாகங்கள், அதே வேளையில் அவர்களது உத்திகளின் போதாமை, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவை தோற்றுவித்த கருத்து வேற்றுமைகளை கையாண்ட விதம் என இந்நூல் ஒரு விமர்சனப் பூர்வமான சுய-ஆய்வாக அமைந்துள்ளது.
Be the first to rate this book.