தனிப்பட்ட, சமூக வாழ்க்கையில் இஸ்லாத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாம் தான் என்றும் கூறுகின்றோம். ஆனால், நம்முடைய வாழ்க்கையில் எந்த அம்சத்திலும் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராக இல்லை. இஸ்லாம் வெறும் உதட்டளவில்தான் இருக்கின்றது. நடைமுறையில் நாம் இறைநிராகரிப்பு, நம்பிக்கையின்மை, சிலை வழிபாட்டைத்தான் பின்பற்றுகிறோம்.
இந்தக் காரணங்களால்தான், அரசியல் மற்றும் சமூகத்தில் நமக்கு எந்தவிதச் செல்வாக்கும் மதிப்புமில்லை. உண்மை யாதெனில், ஒழுக்கக்கேடு என்னும் கரையான் ஏற்கனவே சரிந்திருக்கும் சுவர்களின் அடித்தளத்தை பலவீனமாக்கிவிட்டது.
ஆனாலும், நம்பிக்கையற்ற இந்தக் காலத்தில் ஒரு நம்பிக்கை ஒளி காணப்படுகிறது. சில மார்க்கக் குழுக்கள், அல்லாஹ்வின் போதனைகளை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். நேர்மையான, புத்திசாலித்தனமான இளைஞர்களின் கணிசமான ஒரு குழு பொய்யின் கண்ணுக்கு நேராகப் பார்த்து, சத்திய அறிவை உயர்த்த முயல்கிறது. இந்தப் புயல் வீசும் காலத்தில், முஸ்லிம் சமூகத்தின் சீர்திருத்தத்திற்காக, நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகளைத் தொகுத்து தர்ஜுமானுல் ஹதீஸ் முதல் பாகமாக உங்கள் கைகளில்.
Be the first to rate this book.