குதிகாலுக்கு மேலாக கீழாடை அணியும், நீண்ட தாடிகளை மார்பில் தொங்கவிடும் பலர் 'தாகூத்தின்' நெருக்கத்தைப் பெற இரவு பகலாக அயராது முயற்சிக்கின்றனர். சிபாரிசுகளைச் செய்கின்றனர். இவற்றை எல்லாம் செய்து முடிப்பதில் எள்ளளவும் அவர்களுக்குத் தயக்கம் ஏற்படுவதே இல்லை. ஆனால் அதே சமயம், ஒருவன் எல்லா தடை செய்யப்பட்டவைகளையும் விட்டுவிடுவதோடு, சந்தேகத்திற்கு இடமானவைகளையும் முழுக்கத் தவிர்த்துக் கொண்டுள்ளான்; இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாறாக செயல்படுகின்றான் என்று அவன் வாழ்வில் ஒரு செயலையும் சுட்டிக்காட்ட முடியாது. ஆனால் ஆகுமான விஷயம் ஒன்றை தங்களைப் போலவே விட்டுவிடவில்லை என்பதற்காக அவனை தக்வாவின் வட்டத்திற்கு வெளியே தயங்காமல் தள்ளிவிடுகின்றனர்.
உயிர் வாழ்வு என்ற ஒன்று இல்லாத விண்வெளியை நாம் முதலில் பார்ப்போம். அங்கு உள்ள எல்லாப் பொருட்களும் ஓர் அற்புதமான அமைப்பொழுங்கில் இயங்கிக் கொண்டுள்ளன. ஒவ்வொரு பொருளும் சர்வ சுதந்திரமாக இயங்கிக் கொண்டுள்ளது. தட்டுத் தடுமாற்றம் எதுவுமின்றி தன்னிலக்கை நோக்கி வேகமாக வளர்ச்சியடைந்து சென்று கொண்டுள்ளது. இருந்த போதிலும் மறைவான கையொன்று அதன் கடிவாளத்தை எந்நேரமும் பிடித்தவாறு அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது. தன்னுடைய வழிப் பாதையை விட்டும் விலகிச் சென்றுவிடாத வண்ணம், வேறு பொருளின் பாதையில் குறுக்கிடாத வண்ணம் அதனைக் கட்டுப்படுத்துகின்றது. இதுவே விண்வெளியின் தக்வா ஆகும்.
Be the first to rate this book.