மொழிபெயர்ப்பு மற்றும் உரைவிளக்கம் இரண்டையும் வாசித்து அதன் அறிதலின் வழியே எம்.டி.எம் தனது நவீனத்துவ கவிதையியல் மற்றும் அதன் மொழிச் சட்டகத்தின் வழியே எழுதியுள்ளார். இவருடைய தாவோ தெ. ஜிங் பிரதி என்பது மொழிபெயர்ப்பு என்பதைக் காட்டிலும் 'நவீன கவிதைவழி மொழியாக்கம்’ என்று அழைப்பதே பொருத்தமானது. இந்த நூலை வாசிக்கும் தருணங்களில் நான் சொல்லியுள்ளவை வெளிப்படும்.
எம்.டி.எம் இன் கவிதைத் தொகுதிகயான “நீர் அளைதல்’’ நவீனத்துவத்தின் minimalism தன்மையில் அமைந்தது. அவரின் சமீபத்திய “ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும்’’ கவிதைத் தொகுதியில் படிமங்களை – குறிகளாக மாற்றி படிம வெளிப்பாட்டை கீழறுப்பு செய்யும் விதமாக அமைந்துள்ளது.
அவ்வகையில் அவரது கவிதையாக்கத்தின் நீட்சியாகவே தாவோ தெ. ஜிங் மொழிபெயர்ப்பைக் கருதுகிறேன். இவரது எழுத்துமுறையில் affective poetics ஐ காண முடிகிறது. எம்.டி.எம் இன் கவிதையாக்க முறைமையில் இயங்கும் minimalism முக்கியமானது.
- புத்தகத்தின் முன்னுரையில் எழுத்தாளர், விமர்சகர் எஸ். சண்முகம்
Be the first to rate this book.