விடுதலை நதியின் பிறப்புரிமை. தேங்கிய நீரில் அதன் இயல்பு நசுங்கிக் கிடக்கிறது. நீரலைகளே நதியின் ஜீவலீலைகள்.
நதியைப் போலத்தான் வாழ்வு இருக்க வேண்டும் என்கிறார் லாவோ ட்சு. ஓடும் நதி உன்னத வாழ்க்கைக்கு உவமை ஆகிறது, தன்னியல்பில் தளைகள் அற்று வாழும் வாழ்க்கைக்குத்தான் ஓடும் நதி குறியீடு.
"வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை. நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல்" என்ற நிலைப்பாடுதான் லாவோ ட்சுவின் வாழ்வியல் முறை.
Be the first to rate this book.