காண்பதற்கும் கேட்பதற்கும் அனுபவங்களை விழைவதற்கும் எத்தனையோ விஷயங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன. பூமியை அறிவதற்கும் மனிதர்கள் சேமித்திருக்கும் அறிவையும் கதைகளையும் கற்பதற்கும் இந்த ஒரு வாழ்க்கை போதாது. பிறகு எங்கிருந்து இவ்வளவு இருண்மையும் சலிப்பும் சுரக்கின்றன? தன் உயிரின் இருப்பைத் தானாக மட்டுமே கருதும் அறியாமை இது. இயற்கையையும் பூமியின் உயிரிகளையும் தன் இருப்புக்குள் உள்ளடக்கும்போது வாழ்க்கைக்குப் பொருள் கூடிவிடுகிறது.
ஒளியைத் தேடும் தன் பயணத்தை அவன் தொடங்கவேண்டும். புதிர்களுக்கு இடையிலும் வாழ்க்கையின் தன்கதி இயக்கத்தைக் கண்டடையவேண்டும். தான் உருமாறும் இந்த சுழற்சியில் அறிதல்கள்,பிழைகள், குற்றங்கள் யாவும் இருந்தாலும் தன் அகத்தின் இருண்ட பாதைகளினூடே நடந்து கடக்காமல் எவரொருவருடைய வாழ்க்கையும் இருக்கமுடியாது.
Be the first to rate this book.