இந்தியா ஒரு நந்தனம் – இங்கு
எல்லா வண்ணப் பறவைக்கும் கூடுண்டு
இப்படி வேறெந்த நாடுண்டு?
புள்ளிகளைக் கோலமாக்கிடப்
புரிதல் என்ற கோடுண்டு
குருதியில் கூடப் பிரிவுண்டு- என்னை
கொடுக்கும் தாய்ப்பாலில்
என்ன வேறுபாடுண்டு?
வெட்டியான்கள் காட்டை
விறகாக மட்டுமே பார்ப்பதுண்டு
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களால்-விடியல்
சிதறிற்றும் இல்லை
என்பதை யாரிங்கே மறுப்பதுண்டு?
Be the first to rate this book.