சமீபகாலமாக, ‘தமிழ்த்தேசியம்’ என்ற சொல்லாடல் ஒரு நகைப்புகுறியதாக திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது ஒரு இயக்கம். அதற்கு மிகவும் ஆழமான, சமூகப் பொறுப்பு மிக்க கொள்கைகள் உள்ளன. உன்னதமான சிந்தனையாளர்கள், தலைவர்கள் அதன் பின்னால் உள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனத்தின் பேரிலும் அன்பு காட்டுகிறது. ஒவ்வொரு இனத்தின் விடுதலையையும் உள்வாங்கி ஓங்கி ஒலிக்கிறது. எல்லா மனிதர்கள் மீதும் தோழமை கொள்கிறது இதன் தத்துவம்.
இதை ஒரு புத்தகம் என்ற அளவில் கடந்து விட முடியாது. உண்மையில் ஒரு வரலாற்று ஆவணம். நம் வரலாற்றை, நமக்கே திரையிட்டுக் காட்டும் காலப் பெட்டகம்.
Be the first to rate this book.