தமிழியல் ஆய்வு வரலாற்றில் யாப்பும் பதிப்பும் குறிப்பிடத்தக்க துறையாக விளங்குகின்றன. இவ்விரு துறைகளிலும் புலமை வாய்ந்தவர்களாகச் சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை என ஒரு சிலரையே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்த வரிசையில் தனது யாப்பியல் ஆய்வுகளாலும் பதிப்புச் செயல்பாடுகளாலும் தனித்த கவனத்தைப் பெறுபவர் ய. மணிகண்டன். சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியராக ய. மணிகண்டன் அவர்கள் ஆற்றியுள்ள பணிகள், கையளித்துள்ள ஆய்வுமுறைகள், பாரதிதாசன் படைப்புகளுக்கு உருவாக்கியுள்ள ஆய்வுப்பதிப்புகள், இதுவரை கவனம் பெறாத பாரதியியல் ஆய்வுகள் - படைப்பு ஆகியன குறிப்பிடத்தக்கன. இத்தகு ஆளுமைமிக்க தமிழ்ப் பேராசிரியரான இவர்தம் பணிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தமிழ்ச் சூழலின் ஆய்வுப் போக்கினைப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பின்புலத்தில் அமைந்துள்ள இந்நூல், வருங்காலத் தமிழியல் ஆய்வாளர்களுக்குப் பெரிதும் துணை புரியும்.
Be the first to rate this book.