எம்.ஆர்.ஸ்ராலின் (பிரான்ஸ்) விடுதலை இயக்கமொன்றின் போராளியாகவும், பின்னர் சிறிது காலம் ஒரு பள்ளி ஆசிரியராகவும் இருந்தார். “தமிழீழ புரட்டு” என்னும் எழுத்துக்களை தொகுத்துள்ளார். புகலிட இலக்கியப் பரப்பில் நன்கு அறியப்பட்டவர் அவரது சிந்தனைகளும், எழுத்துக்களும், செயற்பாடுகளும் புகலிடத்தில் மட்டும் அல்ல எமது தேசத்து அரசியலிலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியவை. குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் தனித்துவத்திற்காகவும், தமிழ் – முஸ்லிம் நல்லுறவுக்காகவும் அவர் எழுப்பிவரும் குரல் காரணமாக பல சேறடிப்புகளுக்கும். அச்சுறுத்தல்களுக்கும், பழிவாங்கல்களுக்கும் உள்ளாகிவருபவர். தமிழ் சமூகத்தின் விடுதலை என்பதை தேசிய இனப்பார்வைக்குள் மட்டும் அணுகுவதை கடுமையாக மறுத்தவர்.
Be the first to rate this book.