‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில் வாழும் திராவிடர்கள்-தமிழர்கள் யார்?’ என்பன உள்ளிட்ட கேள்விகள் பல காலமாகக் கேட்கப்பட்டும், விவாதிக்கப்பட்டும்வருகின்றன. இந்தக் கேள்விகள் பலவற்றுக்கு ஆதாரபூர்வ பதில்களைத் தந்தது, டோனி ஜோசப் எழுதிய ‘ஏர்லி இந்தியன்ஸ்’ நூல். இந்திய வரலாற்றுப் பின்னணியில் சர்ச்சைக்குரிய, நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டுவரும் பல கேள்விகளுக்குத் தொல்லியல், மரபணுவியல் ஆதாரங்கள் அடிப்படையில் திட்டவட்டமான பதில்களைத் தரும் இந்த நூலின் பின்னணியில், சிந்துவெளிக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துப் பேசுகிறது இந்த சிறுநூல்.
2 இது வெறும் மொழி பெயர்ப்பு நூல்
ஆதி வள்ளியப்பன் கொற்கை, கீழடி, கடற்கொண்ட இடங்களை பற்றி அறிந்திருந்தால் இந்த நூலை அவர் எழுதி இருக்கவேமாட்டார். அறிவியல் பூர்வமாக யார் முன்னோடி என்று தெரியும் வரை பொருப்போம்.
Kirubakaran 22-10-2021 10:20 am