சுமார் 4500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல கட்டங்களில் இந்தியாவிற்குள் குடியேறிய, மத்தியதரைக் கடலோர வணிகக் குழுக்கள் இந்திய பண்பாட்டு உருவாக்கத்தில் முதன்மைப் பங்களிப்பு செய்தனர் என்ற வரலாற்றுப் பார்வையை இந்நூல் விரிவாக விவரிக்கிறது.
அரசியல் நெருக்கடி காரணத்தினால் தங்கள் அரசுகளை இழந்த மூதாதை சுமேரியர், மூதாதை எகிப்தியர் ஆகிய கருப்பினத்தோர் இணைந்து வணிகக் குழுக்களாக செயல்பட்டனர். இக்குடிகள் தென்னிந்தியாவின் பூர்வீகக் குடிகளுடன் இரண்டறக் கலந்து சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தை சுமேரிய சமூகத்தின் செம்மைப்படுத்தப்பட்ட நீட்சியாக உருவாக்கினர் என இந்நூல் முன்வைக்கிறது.
Be the first to rate this book.