திரைப்படம், மது ஆகிய இரண்டும் தமிழர்களின் வாழ்வில்ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்கள் அளவற்றவை. உலகம் முழுக்க சினிமாவின் ஆதிக்கம்இருந்தபோதிலும், கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தை ஆள்கின்றவர்கள், சினிமாவிலிருந்துவந்தது போன்ற நிலைமை, வேறு எந்த நாட்டிலும் இருக்க வாய்ப்பில்லை. திரைப்படம் என்ற ஊடகம், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இவ்வளவு ஆழமாக ஊடுருவியிருப்பதற்கானகாரணங்கள் ஆய்விற்குரியன. அரசியல், இசை, உடை என எல்லாவற்றுக்கும் தமிழர்கள்திரைப்படத்தைச் சார்ந்திருக்கிற சூழலில், அசலான சிந்தனை இல்லாமல் போகிறது. பத்திரிகைகள், தொலைக்காட்சி முதலாக எல்லா ஊடகங்களும் திரைப்படத்தைக் கேளிக்கைக்காகப் பயன்படுத்துவது, கூச்சமில்லாமல் நடைபெறுகிறது. இத்தகு சூழலில் திரைப்படம் குறித்த பேச்சுகளை உருவாக்கும் வகையில் ந.முருகேசபாண்டியன் எழுதியுள்ள நுண்ணரசியல் சார்ந்த கட்டுரைகள், நூல் வடிவம் பெற்றுள்ளன.
Be the first to rate this book.