பண்டைக்கால மாந்தன் சாதி, சமயப் பாகுபாடுகள் இன்னதென்று அவனுக்குள் நஞ்சூட்டப்படும் முன்னர் வெள்ளந்தியாக வாழ்ந்த காலத்திலும், அவனது உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானியல் போன்றவற்றில் பல்வேறு ஈவுகள் அவனுக்குத் தேவைப்பட்டன. தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும் ஏந்துகளும் இல்லாத சூழலில் யாரிடம் தனக்கான ஈவு கொடுத்தவர்கள் ஆசீவர்கள்.
வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைப்பெற்ற அகழ்வராய்ச்சி மூலம், மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாமல், படிப்பறிவு பெற்றவர்களாக வாழ்ந்து வந்த பழங்கால தமிழர்களின், சங்க கால நாகரிகத்திற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இவ்வகையில், ஆசிவகம் ஒரு மதமாக இல்லாமல் அன்றைய தமிழர்களின் வாழ்வியலாக இருந்ததால் தான் அது தன் இயல்பை இழந்துள்ளது. எண்ணற்ற ஆசீவக அணுவைக் கொண்ட தமிழர்களின் ஆதரவுடன் ஆசீவகத்தை பற்றிய தொகுப்பாக வெளிவருகிறது இப்புத்தகம். மீண்டெழும் ஆசீவகம்.
Be the first to rate this book.