தமிழகத்திற்குத் தண்டாமரை மீது தனி உரிமை உண்டு என்று தமிழர்கள் எண்ணிவந்தனர்; எழுதி வந்தனர்; பாடி வந்தனர். ஆனால் தாமரையின் தனிப் பேரழகு இந்திய நாட்டைப் பெரிதும் கவர்ந்தது. வங்கம், கலிங்கம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என்று குமரி-தொட்டு இமயம்வரையுள்ள கலைஞர்களை மட்டுமல்லாது; சாதாரண மக்களின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது, சமய அறிஞர்களின் உள்ளத்தை வசீகரித்தது. சமண சமயத்திலும், பௌத்த சமயத்திலும் தாமரை இடம் பெற்றதுடன் இந்தச் சமயங்கள் பரவிய நாடுகளிலெல்லாம் தாமரையின் புகழ் பரவியது. இறுதியில் தாமரைச் செடியே எங்கும் பரவிவிட்டது. நாளடைவில் எல்லா நாட்டின் கலைகளிலும் தாமரை இடம்பெற்றுவிட்டது.
Be the first to rate this book.