தமிழர் பண்பாடு என்பதை யாரோ சிலர் வரையறுத்துவிட முடியாது. ஏனென்றால், நம் முன்னோர்களின் வாழ்க்கைத் தொகுப்பு அது. எப்படிப் பொய்யான ஒன்றை நம் பண்பாடு என்று புகுத்திவிட முடியாதோ, அதற்கு இணையாக நிஜமான நம் மரபை இல்லை என்றும் மறைத்துவிட முடியாது. நீண்ட காலமாக நிலவி வரும் நம் பண்பாடு குறித்த சந்தேகங்களை, பொய்ப் பிரசாரங்களை இந்நூலில் எதிர்கொண்டுள்ளார் பா.இந்துவன். தமிழர்களின் பண்பாட்டு அடிப்படைகளை, பழந்தமிழர் நூல்கள் மூலமே நிறுவியுள்ளார். ஒவ்வொரு கேள்விக்கும் மிக விரிவான, ஆழமான, எளிமையான பதில்கள். சங்க காலத்தில் தமிழ்நாடு இருந்ததா, தமிழர் பண்பாட்டில் இதிகாசங்களின் பங்கு என்ன, தமிழர்களின் திருமண முறையில் தாலிக்கு இடம் உண்டா, சங்க காலத்தில் சம்ஸ்கிருதம் இருந்ததா போன்ற இருப்பத்தைந்துக்கும் மேற்பட்ட கேள்விகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு விரிவாக, ஆதாரபூர்வமான பதில்களை எழுதி இருக்கிறார் நூலாசிரியர். இனி எவரும் இதுபோன்ற குழப்பமான கேள்விகளைக் கேட்கக் கூடாது என்பதற்காகவே தெளிவான ஆதாரங்களுடன் வெளியாகி இருக்கிறது இந்த நூல்.
1 Book is full of lies and propaganda
Nothing but half baked truth and lies about tamil history
Yaswanth 24-09-2024 06:41 am