பேராசிரியர் மு.அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, ‘தலவழிபாடு’ எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, ‘பிடியதன் உருஉமை கொளமிகு கரியது’ (பக்.20) என, அப்பரடிகள் பாடியதையும், ‘புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை’ (பக்.31) (புறம் – 106) என, புறப்பாடல் மூலமும் நிறுவியுள்ளார் மூலநூலாசிரியர்.
தமிழகத்தில், அய்யனார் வழிபாடு கட்டுரையில், ‘திருக்கைலாய ஞான உலா’ (பக்.41) நூலை, தமிழகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தவர், பிடவூர் சாத்தன் என, அய்யனாரின் தொன்மையையும், சப்தமாதர் வழிபாடு, பைரவர் வழிபாடு, வீட்டுத் தெய்வ வழிபாடு என, அந்தந்த தெய்வங்களின் தொன்மையையும் பல கட்டுரைகளில் விளக்குகிறார். ‘தல யாத்திரை, தீர்த்த யாத்திரை’ இவ்விரண்டின் மூலம் புண்ணியத் தலங்கள், தீர்த்தங்கள் சிறப்பும் விளக்கப்பட்டு உள்ளன.
Be the first to rate this book.