தமிழகத்தின் நிலஉடைமைச் சமூகமானது, தன் ‘குடி ஊழியக்காரர்களாக’, ‘ஊர்க் குடிமகன்’, ‘ஊர் ஏகாலி’, ‘ஊர் வெட்டியான்’ என்ற பெயர்களில் தனக்குப் பணிபுரிய சில சமூகங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. நவீனத்துவம் அறிமுகமான பின்பும் கூட இன்றும் சில கிராமப்புறங்களில் இது தொடர்கிறது.
இக்குடி ஊழியக்காரர்களில் ஒரு பிரிவினரான வண்ணார்கள் விளிம்புநிலை மக்களாக இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள்.
இவர்கள் வாழ்வியலையும், வழக்காறுகளையும் குறித்த அறிமுக நூலாக இச்சிறுநூல் அமைந்துள்ளது. இலக்கியம், கல்வெட்டு, வரலாறு, வாய்மொழி வழக்காறு, வாய்மொழி சாரா வழக்காறு என்பனவற்றின் துணையுடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நம்முடன் வாழும் நம் சக மனிதர்களைக் குறித்த புரிதலை ஏற்படுத்தும் தன்மை இந்நூலுக்குள்ளது.
Be the first to rate this book.