தமிழகத்தின் வரலாற்றை இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையிலும் எழுத முடியும் என்றாலும் அறிவியல்பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் வரலாறு அமைய வேண்டுமானால் தொல்லியல் ஆய்வுகளின் துணையைத்தான் நாட வேண்டியிருக்கிறது. இந்நூல் முழுக்க, முழுக்க தொல்லியல் தரவுகளைக் கொண்டு தமிழகத்தின் கடந்தகாலத்தைக் கட்டமைக்கிறது. கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், அரிக்கமேடு, சேந்தமங்கலம், தரங்கம்பாடி, காவிரிப்பூம்பட்டினம், மரக்காணம், கங்கை கொண்ட சோழபுரம், தலைச்சங்காடு, பொருந்தல், மாங்குடி, கரூவூர், அழகன்குளம் என்று தொடங்கி வரலாற்றில் நிலைபெற்றிருக்கும் முக்கிய இடங்களில் நாம் கால் பதிக்கப் போகிறோம். ஒரு தேர்ந்த வழிகாட்டி போல் பொ.சங்கர் ஒவ்வோர் இடத்தின் முக்கியத்துவத்தையும் நமக்கு அறிமுகப்படுத்தும்போது வரலாறு உயிர்பெற்று எழுவதைப் பார்க்கிறோம். இந்நூல் வெளிப்படுத்தும் தமிழகத்தின் சிறப்பியல்புகள் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துகின்றன. நம் ஆர்வத்தையும் தேடலையும் தூண்டிவிடவும் செய்கின்றன.
Be the first to rate this book.