இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை.
சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்புமாக உள்ளது இந்த நூல்.
- ஜெயமோகன்
1 Not a good choice!
பொதுவாக மிக சுவராசியமான சில புத்தகங்களை தவிர்த்து பெரும்பாலான புத்தகங்களுக்கு விமர்சனமோ, மதிப்புரையோ எழுதுவதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால் இதற்க்கு எழுத முடிவு செய்ததற்க்கான காரணம் புத்தகம் சிறப்பாக இருக்கிறது என்பதனால் அல்ல. எப்படி ஒரு புத்தகம் இருக்க கூடாது என்பதற்க்கான உதாரணமாக இருக்கும் என்பதால் தான். நோக்கத்தில் பிழை இல்லை. சரியான முறையில் எழுதியிருந்தால் தமிழக நீதிமான்களைக் குறித்த மிக சிறந்த அறிமுக நூலாக இருந்திருக்கும். மாறாக வெறும் தகவல்களின் தொகுப்பாக எஞ்சி நிற்கிறது. நல்ல கட்டுரைகள், குறிப்பிட்ட நபர் சம்பந்த பட்ட நிகழ்ச்சிகளை விவரித்து அவரின் ஆளுமையை படிப்பவர்களுக்கு எடுத்துக்காட்டும். ஆனால் இதில் வெறும் அரை குறையான சம்பவங்களை ஆங்கங்கே அள்ளி தெளித்து கடந்து செல்கிறார் ஆசிரியர். எழுத்தாளார் ஜெயமோகனின் அறிமுக கட்டுரையை அவரது வலைதளத்தில் படித்து விட்டு ஆர்வமாய் வாங்கியது தவறு போல! புத்தகத்தின் ஒரே சுவராசியமான விஷயம் ஜெயமோகனின் அந்த கட்டுரை மட்டும் தான்!
P A Praveen 26-01-2018 01:11 pm