ஒட்டுமொத்தமாக ஈராயிரம் ஆண்டுகள் தமிழகத்தில் புழங்கிய காசுகள் பற்றிச் சொல்லும் ஒரே புத்தகம் என்று ஆறுமுக சீதாராமனின் ‘தமிழகக் காசுகள்’ நூலை மட்டுமே சொல்ல முடியும். அவரின் வாழ்நாள் பணியாக மாறியதை இப்புத்தகம் காட்டுகிறது.
1552 காசுகளின் புகைப்படங்களுடனான நூற்றொகையாக வகைப்படுத்தப்பட்டு, அறிமுகக்கட்டுரைகளுடன் தரமான காகிதத்தில் அச்சிடப்பட்டு வந்திருக்கிறது. இந்தப் புத்தகம் நாணயவியலாளர்களிடம் சிறந்த கையேடாக இருக்கிறது. ஐராவதம் வழங்கியிருக்கும் அணிந்துரை முக்கியமானது.
இதுவரை படித்தறியப்பட்டதாகச் சொல்லப்படும் களப்பிரர், அதியமான், செழியன் காசுகள் வெறும் உருச்சிதைவுகளாலான தோற்றமயக்கங்கள் என்று கறாராக அறிவியல்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் சொல்லும்போது சீதாராமன் மேல் மரியாதை வருகிறது.
வியாபாரிகளிடம் பைபிளாக இருக்கும் இந்த அரிய நூல் ஒவ்வொரு நூலகங்களிலும் கல்லூரிகளிலும் இடம்பெற வேண்டியது!
Be the first to rate this book.