இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சி, அண்ணாவின் ஆட்சி, திமுகவின் பிளவு, கச்சத்தீவு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன் என்று மிக விரிவான களப்பின்னணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொன்றின் உள்ளரசியலையும் ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது.
கீழவெண்மணிப் படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கு ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது. வெறுமனே காலவரிசையாக அல்லாமல் நிகழ்வுகளையும் அவற்றை இயக்கிய அரசியல் தலைவர்களையும் உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார் ஆர். முத்துக்குமார். தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான?ஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்.
Be the first to rate this book.