தமிழுக்கு முன்னோடிகளாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுப் பேராளுமைகளைத், ‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் கடந்த சில ஆண்டுகளாகக் கவிஞர் வைரமுத்து ஆய்வுக் கட்டுரை எழுதி அரங்கேற்றி வருகிறார். இதுவரை தொல்காப்பியர் – அவ்வையார் – கபிலர் – திருவள்ளுவர் – இளங்கோவடிகள் – செயங்கொண்டார் – கம்பர் – அப்பர் – ஆண்டாள் – திருமூலர் – வள்ளலார் – உ.வே.சாமிநாதையர் – கால்டுவெல் – பாரதியார் – பாரதிதாசன் – அண்ணா – கலைஞர் – மறைமலையடிகள் – புதுமைப்பித்தன் – கண்ணதாசன் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஜெயகாந்தன் – அப்துல் ரகுமான் என்று 23 ஆளுமைகளை அரங்கேற்றியிருக்கிறார். 3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு நூல் இது. தமிழுள்ள வரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல். வரலாறு படைக்கப் போகும், ’தமிழாற்றுப்படை’ தமிழுக்கான கொடை, தமிழறிஞர்களுக்கான வணக்கம், தமிழுக்கான மகுடம்.
3
Surendran R 03-02-2020 09:38 am