1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை.
‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் இதிகாச புராணக் கதைகளுடன் வேறு சில விளக்கங்களையும் கூடுதலாகக் கொண்ட உரை நூல் இது.
தமிழின் மாட்சியை மதிப்பிடும் இந்நூற் பெருமையை அறிஞர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும் அறிந்தின்புறும்படி ஆக்கித் தந்திருக்கிறார் ‘தமிழ்ப் பரிதி’ டாக்டர் ப.சரவணன்.
Be the first to rate this book.