இந்நூலைப் படிக்கையில் எனக்கு அறந்தை நாராயணன் அவர்கள்தான் நினைவில் வந்துபோனார். கிட்டத்தட்ட அதே மாதிரியான எழுத்து நடை மற்றும் சம்பவ விரிப்புகளை என்னால் காண முடிந்தது. ஒரே அமர்வில் இரண்டு மணி நேரங்களுக்குள்ளாக இந்தப் புத்தகத்தை முடிக்க முடிந்ததற்கு முதற்காரணம் இதுதான். மறந்து போனவர்கள் என்கிறபோதே நாம் ஒரு காலகட்டத்தை ஆண்டவர்களைப் பற்றி படிக்கப் போகிறோம் என்பதுதான் நிதர்சனம். அதுவும் இயக்குநர்கள் என்பதால் அவர்கள் ஒரு காலகட்டத்தை எப்படி தங்கள் படங்களில் பதிவு செய்திருப்பார்கள் என்கிற கேள்வியும் சேர்ந்தே அதில் பிறக்கும். அதை மிக எளிமையாக தனது கட்டுரைகளில் செல்வன் அன்பு பதிவு செய்துள்ளார்.
- எழுத்தாளர் பால கணேசன்
Be the first to rate this book.