வெறும் பெயர்களும் எண்களும் நிறைந்திருக்கும் டெலிபோன் டைரக்டரிபோல மன்னர்களின் பெயர்களாலும் அவர்கள் ஆண்ட/ அழிந்த ஆண்டுகளின் எண்களாலும் நிறைக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாளர்களால் அலுப்புடன் குறிப்பிடப்பட்ட இந்திய வரலாற்றை மக்களின் வரலாறாக மாற்றியெழுதி நேர்செய்யும் ஆய்வாளர்களில் ஒருவராக தோழர் மணிக்குமார் வளர்ந்தெழுந்த சித்திரத்தை இந்நூலின் ஈற்றிலுள்ள “எழுத எழுதவே வாசிப்பு கூடும்” என்கிற கட்டுரை வழங்குகிறது.“ஆய்வுதான் அறிவு” என்கிற புரிதலூறிய மார்க்சீய ஆய்வாளராக கடந்த காலத்தின் குறிப்பிடத்தக்க சில நிகழ்வுகளையும் போக்குகளையும் மணிக்குமார் ஆய்ந்தெழுதத் தேர்ந்துகொண்டதன் காரணம் இந்தப் பின்புலம்தான்.
Be the first to rate this book.