சமயங்களின் அடிப்படையில் எழுந்துள்ள இறைவழிபாட்டு ஆலயங்கள் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாக விளங்குகின்றன. தமிழ்நாட்டை ஆட்சி புரிந்த பாண்டியர், சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின் ஆதரவினால் புகழ்மிக்க பல ஆலயங்கள் எழுந்துள்ளன. ஆலயங்களை மையமாக வைத்தே சிற்பம், கட்டம், இசை, நடனம், ஓவியம் முதலிய பல நுண்கலைகள் வளர்ந்துள்ளன. சங்க காலம் முதல் இந்து சமயத்தைப் பின்பற்றிம் மக்களே தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். இக்காரணத்தினால் தமிழகத்தில் ஏராளமான சைவ, வைணவ வழிபாட்டு ஆலயங்கள் எழுந்துள்ளன. பண்டைக்காலம் முதல் தற்காலம் வரை தமிழ்நாட்டில் இஸ்லாமியப் பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமணர் ஆலயங்கள் ஆகியவையும் சமயச்சார்பற்ற கட்டடங்களான கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவையும் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாகும்.
Be the first to rate this book.