இந்தச் சட்டப்படி எது குற்றம்? அதற்கு என்ன தண்டனை? இதன் பயன் என்ன? பாதிப்புகள் என்ன? என்று உங்கள் மனதில் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்குப் பதில் தருகிறது இப்புத்தகம்.
இந்தக் கணினி யுகத்தில் நாமோ நம்மைச் சார்ந்தவர்களோ தெரிந்தோ தெரியாமலோ கணினி, இணைய, மின் வணிகச் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வேண்டிய நிலை வரலாம். ஆபத்து வருவதற்குமுன் நம்மைக் காத்துக் கொள்வதற்காக சைபர் சட்டத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று நாமிருக்கிறோம்.
தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் நன்மைகளை முழுதாகப் பயன்படுத்திக் கொள்ள தொழில் நுட்பத்திற்கும், மனிதனுக்கும் இடையே மொழி ஒரு தடையாக இல்லாதவாறு பார்த்துக்
கொள்ள வேண்டியது அவசியத் தேவையாகும்.
இந்நூல் அத்தகைய தடைகளை அகற்ற உதவுவதோடு, இது போன்ற வெளியீடுகள் ஏனைய இந்திய மொழிகளில் வெளிவருவதற்கும் ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளது.
Be the first to rate this book.